நாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு…!!!! பாஜக எம்பி கடும் தாக்கு…!!!
- நமது இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவே நமது நாட்டின் மிகப் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் என பஜக எம் பி சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி கூறிய கருத்திற்கு பஜக எம் பியின் கருத்தால் இந்திய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு அண்மையில் உயிரிழந்த உன்னவ் பெண் மற்றும் தெலுங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் ஆகியவையே நாட்டையே உலுக்கிய பெரும் சம்பவங்களாகும்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அவர் அப்போது உலகிலேயே இந்தியா அதிக பலாத்கார சம்பவங்களுக்கு பெயர் பெற்றுவிட்டது என்றும், இதை பார்த்து விட்டு இந்தியா, தங்கள் மகள்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க முடியாதது ஏன்? ஆஎனைய நாடுகள் கேள்வி எழுப்புகின்றன என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து நாட்டின் பிரதமர் எந்தவித கருத்தையும் கூறவில்லை என்றார். இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்திற்க்கு பா ஜ க எம்பியான சாமியார் சாத்வி பிராச்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கூறுகையில் இந்தியாவை பொறுத்தவரை இது ராமர், கிருஷ்ணர்களின் நாடு.ஆனால் இந்தியவை பொறுத்தவரை ஜவஹர்லால் நேருவே மிகப் பெரிய பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர். இதற்கு ராகுல்காந்தி என்ன சொல்வார்?. மேலும் நம் நாட்டின் ராமர், கிருஷ்ணர் போன்ற சிறந்த கலாசாரங்களை கெடுத்துவிட்டார் எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியல் வட்டரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.