பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஆளும் பாஜக எம்.பி-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுள்ளது.
போபால் பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா உறுதியானது. இந்த தகவலை தனது ட்விட்டரில் சாத்வி பிரக்யா தெரிவித்தார். அதில், இன்று எனக்கு கொரோனா அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். 2 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாங்கள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறோம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் “என்று எம்பி பிரக்யா ட்வீட் செய்துள்ளார். போபால் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கொரோனா முதல் அலையின் போது, அவர் கொரோனா நோயால் நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தார். இருப்பினும், மாட்டு கோமியம் நுரையீரல் தொற்றுகளைக் குறைக்கிறது மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறது என்று கூறியது அனைவரும் அறிந்ததே.
தான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், தினமும் கோமியம் குடித்து உயிர் பிழைப்பதாகவும், கொரோனா வைரஸைத் தடுக்க கோமியத்தைத் தாண்டிய மருந்து எதுவும் இல்லை என்றும் பிரக்யா கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
आज मेरी कोरोना रिपोर्ट पॉजिटिव आई है। मैं चिकित्सकों की देखरेख में हूं। 2 दिनों में जो भी मेरे संपर्क में आए हैं सभी से आग्रह है कि सचेत रहें और आवश्यकता पड़ने पर कोरोना टेस्ट भी करवा लें। हमें आपकी चिंता है। प्रभु से प्रार्थना है आप सभी स्वस्थ रहें।
— Sadhvi Pragya singh thakur (@SadhviPragya_MP) January 30, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025