வாக்காளர்களை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ, தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்தில், வகோடியா தொகுதியில், பாஜக, எம்.எல்.ஏ-வாக மது ஸ்ரீவாஸ்தவா இருந்து வருகிறார். இவர் 6 முறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், ” பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து, இவர் பேசிய ஆதாரத்தோடு, காங்கிரஸ் கட்சியினர் கடந்த 6-ம் தேதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரியான ஷாலினி அகர்வால் மது ஸ்ரீவாஸ்தவாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.