நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் சுடப்படுவர் என பாஜக எம்எல்ஏ கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த தேர்தல் பிரச்சார மேடையில் கர்நாடக பாஜக எம்எல்ஏ கூறிய கருத்து மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல் பிரச்சார பேரணியில் பேசுகையில், தர்மத்திற்கு எதிராகவோ அல்லது இந்தியாவிற்கு எதிராகவோ செயல்படுபவர்கள் சுடப்படுவார்கள் என்றும், நாங்கள் அவர்களை சிறைக்கு அனுப்புவதை நிறுத்தி, சாலையிலேயே அவர்களுக்கான முடிவு எடுக்கப்படும். என்று வெளிப்படையாக கூறி பரபரப்பை உண்டு செய்தார்.
மேலும், அவர் கூறுகையி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முறையை கர்நாடகாவில் பாஜக அமல்படுத்தும் என்று பாஜக எம்எல்ஏ யத்னால் கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் அண்மையில் கேங்ஸ்டர்கள் தொடர் போலீஸ் என்கவுண்டர் மற்றும், மர்ம நபர்களால் ரவுடிகள் சுடப்பட்ட நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…