கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர பூஜை நடத்திய பாஜக எம்எல்ஏ.!
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர கர்நாடகா பாஜக எம்எல்ஏ யாகம் நடத்தியுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யார் கொரோனா வைரசுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வைரஸில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் பூஜை நடத்தி உள்ளனர். பூஜையில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.