நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது !

Default Image

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூல் நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்க நகராட்சி அலுவலர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார்.
இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. நகராட்சியின் உத்தரவால் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ் விஜய்வர்கியா  அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் நகராட்சி அலுவலரை தாக்கியுள்ளார்.
 

இதனை அடுத்து தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது காவல்துறையில் நகராட்சி அலுவலர் புகார் தந்துள்ளார். இதனடிப்படையில் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். நகராட்சி அலுவலரை தாக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்