கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் ஐயப்பன் கோவில் சென்ற பெண்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
வருகின்ற மே மாதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் பிரச்சாரத்தையும் தற்போதே இவர்கள் தொடங்கி விட்ட்டனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் குடகு என்ற இடத்தில் பாரதீய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் இங்கே வந்தால் அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்று சரிச்சைக்குரிய வகையில் பேசினார்.மேலும் அவர் பேசுகையில் , இந்து பெண்களை தொட்டால் கையை வெட்டுங்கள் என்று பரபரப்புக்குரிய வகையில் பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜகவில் இருந்தே கண்டனம் எழுந்துள்ளது . மேலும் அமைச்சரின் இந்த கருத்து தவறானது என்றும் அவரின் இந்த பேச்சுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக மாநில பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…