எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை செய்த பாஜக பிரமுகர்கள் சஸ்பெண்ட்

BJP: புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

Read More – நான் என்ன செய்கிறேன்.. அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது கட்சியின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதன்படி பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து பாஜக பொதுச் செயலாளர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்