பா.ஜ.க. விற்கு வாக்களிக்கும் படி கூறியதால் மத்திய படைகள் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிந்த உள்ளது.இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் என 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காளத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கான 3 வது கட்ட தேர்தல் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 92 சதவீத வாக்கு மையங்களில் மத்திய படைகள் பாதுகாப்பிற்காக உள்ளன.
இந்நிலையில் வாக்களிக்க மையத்திற்கு வரும் வாக்காளர்களிடம் காவி கட்சிக்கு வாக்களிக்குமாறு மத்திய படைகள் கூறி வருகின்றன என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் , தக்ஷிண் மற்றும் பலூர்காட் தொகுதிகளில் வாக்கு மையங்களில் உள்ளே மத்திய படை அமர்ந்து கொண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் கூறி வருவதாக எனக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்.மேலும்
கடந்த 2016 மேற்கு வங்காள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. இதே போன்று செய்தது என கூறினார்.