Upendra Singh Rawat: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உபேந்திரா சிங் ராவத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெண்ணொருவருடன் உபேந்திரா சிங் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் வாபஸ் முடிவை உபேந்திரா எடுத்துள்ளார்.
தற்போது உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள உபேந்திராவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இப்படியான சூழலில் தான், உபேந்திரா வெளிநாட்டு வம்சாவளி பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ள உபேந்திரா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உபேந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட என்னுடைய எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது, இது குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு மாண்புமிகு தேசியத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை பொது வாழ்வில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…