4 மாநிலங்களில் பாஜக முன்னிலை- தேர்தல் ஆணையம்..!
உ.பி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. தொடர்ந்து, வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ சமீபத்திய நிலவரப்படி, 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களிலும், 2 பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
உத்தரகாண்டில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கோவாவில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 1 இடங்களிலும் முன்னிலை. மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 6 இடங்களிலும், ஜனதா தளம் 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.