கிங் மேக்கர்களாக சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.! இன்று முக்கிய ஆலோசனை.!
NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் பாஜக உயர்மட்ட தலைவர்கள் இன்று சந்திரபாபு நாயுடு (TDP), நிதிஷ் குமார் (JD(U)) ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என்று செய்தியை PTI நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதே போல, இன்று இந்தியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணி அல்லாத மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்க உள்ளனரா என்பது பற்றி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.