பாஜக தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர் : பாஜக எம்.பி…!
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா தொகுதியில் பிரதமர் மோடியின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த தொகுதியின் எம்.பி பிரிஜ்பூஷண் சரண் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உண்மையுடன் நேர்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால் பாஜக தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது.
மந்திரிகள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க யோகிக்கு நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மூத்த தலைவர்கள் பலர் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்று எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.