பாஜகவை சேர்ந்த டிக்டாக் புகழ் சோனாலி போகட், ஹரியானா விவசாயிகள் சந்தைக் குழுவின் மூத்த அதிகாரியை தனது செருப்பால் அடித்த வீடியோ மூக ஊடகங்களில் இன்று வைரலாகியுள்ளது
ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர். அதன்பிறகு பா.ஜ.கவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட சோனாலி போகட், அடிக்கடி தனது சொந்த தொகுதிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று அங்குள்ள விவசாயச் சந்தையை ஆய்வு செய்த பின்னர், அவரிடம் புகார் அளித்த விவசாயிகளின் புகார்களோடு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கிடம் கொடுக்கச் சென்றார்.
இதனையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட சுல்தான் சிங்கிடம் சோனாலி போகட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென தனது காலில் இருந்த செருப்பைக் கழட்டி சுல்தான் சிங்கை சரமாரியாக சோனாலி போகட் தாக்கினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தற்போது அது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சுல்தான் சிங் கூறுகையில், சோனாலி போகாட் புகார் கொடுத்தும் அதனை வாங்கிக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன். பின்னர் சோனாலி என்னிடம் நான் யாரென்று தெரிகிறதா எனக் கேட்டார். அதற்கு உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் ஆதம்பூர் தேர்தலில் போட்டியிட்டவர் எனக் கூறினேன்.
இதனையடுத்து உடனே சோனாலி, ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது நான் எந்த தவறு செய்யவில்லை என சமாதானம் செய்ய முயற்சிக்கும் போதே நீ என்னை துஷ்பிரயோகம் செய்து விட்டாய் என்று கூறி செருப்பால் அடிக்கத் தொடங்கி விட்டார் என்றார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி சுல்தான் சிங் மற்றும் சோனாலி போகட் ஆகிய இருவரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…