ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள வெசுவில் அகமது காண்டே என்பவர் அவரது இல்லத்திற்கு வெளியே சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாஜக பஞ்சாயத்து தலைவர் சஜாத் அஹ்மத் காண்டே என்பவர் குல்கம் மாவட்டத்தில் வெசுவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் துப்பாக்கி காயங்களுடன் அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. காண்டே பாதுகாப்பான புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்தார். நேற்று காலை அவர் வெசுவில் உள்ள தனது வீட்டைப் பார்ப்பதற்காக முகாமிலிருந்து வந்துள்ளார். காண்டே அவரது வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 4 -ம் தேதி மாலை அக்ரான் காசிகுண்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக பஞ்ச் ஆரிஃப் அகமது படுகாயமடைந்தார். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…