காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர் உயிரிழப்பு.!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38) நேற்று காலை நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல் ஆகும்.
சில நாள்களாக காஷ்மீரில் பாஜக தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. கடந்த 6-ம் தேதி பாஜக பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது என்பவர் அவரின் வீட்டின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025