ஹவுராவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த இஷ்ரத் ஜஹான், தங்கள் கட்சியில் இணைந்து கொண்டதாக பா.ஜ.க.வின் மேற்குவங்க மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்துள்ளார். இவர் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்களுள் ஒருவரான இஷ்ரத் ஜஹான். இஷ்ரத் ஜஹானுக்கு பா.ஜ.க. சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஷ்ரத் ஜஹானின் கணவர் துபாயில் இருந்தபடி செல்போன் வாயிலாக மூன்று முறை தலாக் கூறி திருமண பந்தத்தை முறித்துக் கொண்டதை அடுத்து முத்தலாக் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதேபோன்ற ஐந்து மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…