பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்தார் .இந்த அழைப்பை ஏற்று நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள்பங்கேற்றனர்.
இதில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…