தபால் வாக்குகளில் முந்தும் பாஜக..! காங்கிரஸ் பின்னடைவு.!
மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதற்படியாக காலை 8 மணி முதல் 542 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில், பெரும்பாலும், ஆளும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
9 மணிநேர நிலவரப்படி, 543 தொகுதிகளில் 472 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில், 277 தொகுதிகளில் பாஜக முன்னிலை என்றும், 182 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை என்றும் 16 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை என்றும் NDTV செய்தி தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.