இடைத்தேர்தலில் முன்னிலை பெரும் பாஜக.. காங்கிரஸ் பின்னடைவு.!

இடைத்தேர்தல்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல தமிழகம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.
மேலும், இந்தியா முழுக்க குஜராத், ஹரியானா, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 25 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.
இதில், அரசியல் கட்சிகள் ரீதியாக பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய அட்வசரி கட்சி (BAP) ஒரு தொகுதியிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.
அதில், தமிழகத்தில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை 9400 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் நந்தினியை விட 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.