ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!
BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக இருக்கிறது பாஜக. ஆளும் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றியது.
பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் தான் இருந்தனர். அனால் அதற்கு பிறகு தொகுதி பங்கீடு ஒத்துவராத காரணத்தால் இந்த கூட்டணி முறிந்தது .
Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!
இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலோடு, ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் வர உள்ள நிலையில், மீண்டும் பாஜக – பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றாற்போல, BJD துணைத் தலைவரும், மாநில எம்.எல்.ஏ.வுமான தேபி பிரசாத் மிஸ்ரா நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன என்று கூறினார்.
Read More – குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே!
இந்நிலையில், ஒடிசா மாநில பாஜக மாநில தலைவர் மன்மோகன் சமல், டெல்லியில் கட்சி தலைமையுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டு பின்னர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் வந்தடைந்தார் . அப்போது, அவர் பேசுகையில், ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 மக்களவை தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தகுதியான வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி டெல்லி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம் என கூறினார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு பற்றி எதுவும் ஆலோசிக்கவில்லை என்றும் சமல் கூறினார்.
Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!
இந்த கூட்டணி பற்றிய செய்தியை பிரபல தனியார் செய்தி நிறுவனமான NDTV தளத்தில் குறிப்பிடுகையில், பாஜக, பிஜு ஜனதா தளம் இடையே கூட்டணி பேச்சுவார்தையில், புவனேஸ்வர் மற்றும் பூரி மக்களவை தொகுதியில் உடன்பாடு எட்டவில்லை என்றும், அதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லாமல் இருந்துவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.