சர்ச்சையை உருவாக்குகிறது பாஜக..! மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர்..!
பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களை இழிவாக பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் மன்னிப்பு கேட்டுள்ளார்.
2019-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த 17 எம்எல்ஏக்களை “விபச்சாரி” என ஒப்பிட்டு கர்நாடக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறினார். அதற்கு பாஜகவினர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், எனது அறிக்கையை பாஜகவினர் அவர்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி பாலியல் தொழிலாளர்கள் குறித்து தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர் என்று கூறினார்.
பாலியல் தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்கள் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாடக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் மேலும் கூறினார்.