சீரமைக்க முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

aravinthkejriwal

சீரமைக்க முடியாத சேதத்தை நமது ஜனநாயகத்திற்கு பாஜக ஏற்படுத்துகிறது என டெல்லி முதல்வர் ட்வீட்.

இன்று காலை 8 மணி முதல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ED ரெய்டுகளுக்கு கண்டனம்;
சீரமைக்க முடியாத சேதத்தை நமது ஜனநாயகத்திற்கு பாஜக ஏற்படுத்துகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்