“பாஜக ஒரு ‘ஜும்லா’ கட்சி;நாங்கள் இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்” – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்..!
மேற்குவங்க பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,பாஜக குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பவானிபூரில், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து,மேற்குவங்க பவானிபூரில் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து,பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்தார்.இதனைத்தொடர்ந்து,தேர்தல் பரப்புரை பணிகளில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,பவானிபூரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா அவர்கள்,”மாநிலத்தில் துர்கா பூஜை, லட்சுமி பூஜையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக பொய் சொல்கிறார்கள்.பாஜக ஒரு ‘ஜும்லா’ கட்சி.
நரேந்திர மோடி ஜி, அமித் ஷா ஜி அவர்களே,தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மாற்றியது போல,இந்தியாவை ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்.இந்தியா ஒற்றுமையாக இருக்கும் … காந்தி ஜி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், குரு நானக் ஜி, கௌதம் புத்தா, ஜெயின்ஸ் பாதையில் அனைவரும் நாட்டில் ஒன்றாக இருப்பார்கள். நாங்கள் இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்”,என்று கூறியுள்ளார்.
Narendra Modi Ji, Amit Shah ji, we won’t let you make India like Taliban.India will remain united…Gandhi ji, Netaji,Vivekananda, Sardar Valllabhai Patel, Guru Nanak ji, Gautam Budhha, Jains…all will stay together in the country.We won’t let anyone divide India: West Bengal CM
— ANI (@ANI) September 22, 2021
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா,மேற்குவங்க முதல்வராக பதவியேற்ற நிலையிலும், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.