Categories: இந்தியா

திரிபுராவில் பிஜேபி கூட்டணி வெற்றி; சிபிஎம் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல்…!!

Published by
Dinasuvadu desk

வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாயின. இதில் கடந்த 25 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களை கைபற்றியது( வாக்கு சதவிகிதம்-45%). ஆனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐபிஎப்டி(IPFT) கட்சியும் 43 இடங்களை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத பிஜேபி, இந்த தேர்தலில் சுமார் 35 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் பிஜேபி மற்றும் ஐபிஎப்டி கட்சியினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாநில நிர்வாகி கணேஷ் தபர்மா வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதே போல் கொயாயில் உள்ள கிழக்கு ராம்சந்திரகாத்தில் இருந்த கட்சியின் உள்ளூர் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.

அதே போல் தக்கார்லாவில் உள்ள பிரமோதேநகரில் இருந்த கட்சியின் உள்ளூர் அலுவலகம் தீயினால் கொளுத்தி தாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநில முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தலைநகர் அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் டதாகதா ராயிடம் ((Tathagata Roy)) வழங்கினார். 1998ஆம் ஆண்டு முதல் திரிபுராவின் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் ஊழலற்ற தலைவர்,ஏழை முதல்வர் எனப்பெயர் பெற்றவர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

5 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

23 minutes ago

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

1 hour ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

1 hour ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

1 hour ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

2 hours ago