திரிபுராவில் பிஜேபி கூட்டணி வெற்றி; சிபிஎம் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல்…!!
வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாயின. இதில் கடந்த 25 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களை கைபற்றியது( வாக்கு சதவிகிதம்-45%). ஆனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐபிஎப்டி(IPFT) கட்சியும் 43 இடங்களை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத பிஜேபி, இந்த தேர்தலில் சுமார் 35 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலங்கள் பிஜேபி மற்றும் ஐபிஎப்டி கட்சியினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாநில நிர்வாகி கணேஷ் தபர்மா வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதே போல் கொயாயில் உள்ள கிழக்கு ராம்சந்திரகாத்தில் இருந்த கட்சியின் உள்ளூர் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
அதே போல் தக்கார்லாவில் உள்ள பிரமோதேநகரில் இருந்த கட்சியின் உள்ளூர் அலுவலகம் தீயினால் கொளுத்தி தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தலைநகர் அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் டதாகதா ராயிடம் ((Tathagata Roy)) வழங்கினார். 1998ஆம் ஆண்டு முதல் திரிபுராவின் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார் ஊழலற்ற தலைவர்,ஏழை முதல்வர் எனப்பெயர் பெற்றவர்.