டெல்லியில் கொரோணா பரவலுக்கு மத்தியில் கூட துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை பாஜக வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக கட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடிய டெல்லி முனிசிபல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படவில்லை எனவும், பாஜக துப்புரவு தொழிலாளர்களை அவமதிப்பதாகவும் ஆம் ஆதமி நகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் அவர்கள் டெல்லியின் சுகாதார அமைப்பு சரியில்லை என்பதை திசைதிருப்பும் தந்திரம் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…