ஆந்திர அரசியல் அதிரடி.! சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – பாஜக மெகா கூட்டணி.!

Elections2024 - TDP - BJP Alliance

BJP-TDP : மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் பாஜக தென் இந்தியாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது.

Read More – ஒடிசாவில் ஒத்துவராத தொகுதி பங்கீடு.? தனித்து போட்டியிடும் பாஜக.!

ஆந்திர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க, ஆளும் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருமே முயற்சி செய்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் கூட ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதனால் , ஆந்திர மாநிலத்தில் பாஜக , ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் உடன் தான் கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம், பாஜகவுடன் கூட்டணி என அறிவித்து விட்டது. இதற்காக நேற்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா உடன் சந்திரபாபு நாயுடு ஆலோசித்து இதனை அறிவித்துள்ளார்.

Read More – எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை: மத்திய அரசின் மீது அமைச்சர் உதயநிதி விமர்சனம்

இது குறித்து,  பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சந்திரபாபு நாயுடு கூறுகையில்,  ஆந்திரப் பிரதேசம் மோசமாக அழிவு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதனை தடுக்க, பாஜகவும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றிணைவது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் நல்ல மாற்றத்தை அளிக்கும் என கூறினார்.

ஏற்கனவே, ஆந்திர சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது . தற்போது இந்த கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது.  இந்த கூட்டணி தொடர்பாக, மூன்று கட்சிகளும் கூட்டாக அறிக்கை வெளியிடப்படும் என்றும், மார்ச் 17ஆம் தேதி குண்டூரில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக பேரணி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More – கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது … வானதி சீனிவாசன் விமர்சனம்!

மக்களவை தேர்தலில் பாஜக 10 தொகுதிகள் கேட்ட நிலையில், அதனை மறுத்து, பாஜகவுக்கு 6 தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு 2 தொகுதிகள் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு 17 தொகுதிகள் என தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற விவரம்,பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்