இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் ராவ் சாகேப்!
இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராவ் சாகேப் அவர்கள் நேற்று கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்களது ஆட்சியை அல்லது தங்களுக்கு சாதகமான ஆட்சியை தக்க வைத்து கொள்வதில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக ஆட்சி எந்தெந்த நாடுகளில் வலிமை இன்றி இருக்கிறதோ அங்கெல்லாம் தற்பொழுது தங்களது அடித்தளத்தை வலுவாக்க வேண்டுமெனவும் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் குறைவான வாக்குகள் உள்ள இடங்களிலேயே பாஜக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் மற்ற பிற கட்சிகளை விட இரு மடங்கு அதிக சீட்டுகள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் பாஜகவுக்கு உருவாகியதால் தான் கடந்த ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் தற்பொழுது மகாராஷ்டிராவில் மேல்சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அவுரங்காபாத் மாவட்டம் பர்பானியில் உள்ள பட்டதாரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளருக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராவ் சாகேப் அவர்கள் நேற்று பிரசாரம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர் பாஜக தொண்டர்கள் மராட்டியத்தில் நமது ஆட்சி மீண்டும் வராது என நினைத்து சோர்வடைய வேண்டாம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்போம் எனவும், இதற்கான கணக்கீட்டு பணிகள் தற்பொழுது ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது நடைபெற உள்ள மேல்சபை தேர்தல் முடிவுக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.