காஷ்மீரில் பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.

Published by
Kaliraj
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.
குல்ஹம் மாவட்டம் ஒய்கே பூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷித் பேக் குல்ஹம் மாவட்ட பாஜக கட்சியின் இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார். அதேபோல் அப்பகுதியை சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடா ஹசன் யாதூ ஆகிய இருவரும் மாவட்ட பாஜக நிர்வாகிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள்  3 பேரும் இன்று இரவு 8 மணியளவில் ஒய்கே பூரா பகுதியில் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை இடைமறித்த பயங்கரவாதிகள் பாஜக நிர்வாகிகள் மீது சரமாறியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை  தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published by
Kaliraj

Recent Posts

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

2 minutes ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

16 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

16 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

17 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

17 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

18 hours ago