பாஜகவின் கஜானாவை நிரப்பிய நன்கொடைகள்!கோடிகளில் மிதக்கும் பாஜக …..
பாஜகவுக்கு ரூ. 488 கோடி நன்கொடையை 9 தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் வழங்கியுள்ளது.
கடந்த 2013-14ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.637.54 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-
கடந்த 2013-14ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.637.54 கோடி நன்கொடையை 9 தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் வழங்கியுள்ளன.
ஒட்டுமொத்த நன்கொடையில் 92.30 சதவீதம் அதாவது ரூ.588.44 கோடியை 5 தேசிய கட்சிகள் மட்டுமே பெற்றுள்ளன. 7.70 சதவீதத்தை மட்டுமே அதாவது ரூ.49.09 கோடி மட்டுமே மாநிலக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
தேசியக் கட்சிகளில் பாஜக அதிகபட்சமாக கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை ரூ.488.94 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.86.65 கோடி பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும்தான் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தொடர்ந்து நிதி பெற்று வருகின்றன.
இதில் கடந்த 2013-14ம் ஆண்டு ரூ. 85.37 கோடி, 2014-15, ரூ.177.40 கோடி, 2015-16 ரூ.49.50 கோடி, 2016-17ம் ஆண்டு ரூ.325.27 கோடி நன்கொடையை தேர்தல் அறக்கட்டளை அமைப்புகள் மூலம் திரட்டி தரப்பட்டுள்ளது.
மொத்தம் 21 பதிவு பெற்ற தேர்தல் அறக்கட்டளை அமைப்புகளில் 14 அமைப்புகள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் முறையாக ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன.
இதில் கடந்த 2016-17ம்ஆண்டு அதிகபட்சமாக புருடன்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.283.73 கோடி நன்கொடையை திரட்டி, அதில் ரூ.283.72 கோடியை 6 அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….