2 வது முறையாக சமூக இடைவெளியை மீறிய பா.ஜா.கா பெண் எம்.பி!
ஒடிசாவின் பா.ஜ.க பெண் எம்.பி சமூக இடைவெளிகளை இதோடு இரண்டாவது முறையாக மீறியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒடிசாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியுள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதும், சமூக விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ஜா.கா பெண் எம்பியும் ஒடிசாவின் மந்திரியுமான அபராஜிதா சாரங்கி என்பவர் பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் தனது தொண்டர்களுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது சமூக இடைவெளி விதிகளை மீறி அவர் செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது வேண்டுமென்றே போடப்பட்டுள்ள ஒரு சர்ச்சை என பெண் எம்பி சார்பாக கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர் ஏற்கனவே ஊரடங்கு சூழல் அமலில் இருக்கும் பொழுது கடந்த 4ம் தேதி சமூக இடைவெளியை மீறியதாக புகார் கொடுக்கப்பட்டு அதற்காக அபராதமும் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.