பாஜக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டம் – முன்னாள் முதல்வர் எடியூரப்பா

தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என கூறினார்.
மேலும், கூட்டாக இருப்பதும், பலரை ஒன்றிணைப்பதுமே வெற்றியை தரும். பாஜக நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025