கர்நாடகாவில் இன்று கூடுகிறது பாஜகவின் செயற்குழு கூட்டம்!

Default Image

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2 நாள் நடக்கும் கர்நாடக பாஜக செயற்குழு கூட்டம் ஒசப்பேட்டேவில் இன்று கூடுகிறது. கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீஸ், முதல்வர் பசவராஜ், தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.

அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் புகார் கூறிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஈஸ்வரப்பா. இந்த நிலையில், இன்று மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்