பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி

Narendra Modi: நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் நிதியாக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2000 வழங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வகையில், crowdfunding எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை (‘Donate for Desh’ ) என்னும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அண்மையில் அறிவித்து நன்கொடை பெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ‘தேசத்தை கட்டியெழுப்ப நன்கொடை’ (Donation For Nation Building) என்ற நன்கொடை பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. நமோ செயலி மூலம் நன்கொடை அளிக்குமாறு கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “இந்தியாவை வளர்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு நாம் அனைவரும் முன்வந்து நமோ செயலியைப் பயன்படுத்தி இந்த #DonationForNationBuilding வெகுஜன இயக்கத்தில் இணைவோம்.” என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

Read More – ரூ. 63 கோடி மதிப்பிலான வாட்ச் கட்டிய ஆனந்த் அம்பானி! வாய்பிளந்த பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் மனைவி

இந்த நிலையில், தேசத்தை கட்டியெழுப்ப நன்கொடை திட்டத்தின் கீழ், நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக நிதியாக பிரதமர் மோடி ரூ.2000 நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜகவுக்கு பங்களிப்பதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் மகிழ்ச்சியடைகிறேன். நமோ செயலி மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்