பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பாஜக மையமாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவா அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசியபோது, சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ அதேபோல வரவிருக்கும் ஆண்டுகளில் பாஜக இருக்கும். இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால் அக்கட்சியை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது.
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக எங்கும் போகாது. மோடியை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. பாஜகவுடன் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பாஜக மையமாக இருக்கும். மோடியின் வலிமையை அறிந்து கொள்ளாதவரை மோடியின் இடத்துக்கு ராகுல்காந்தியால் வரமுடியாது.
அவரை தோற்கடிக்கவும் முடியாது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்து போராட வேண்டியதிருக்கும் என தெரிவித்தார். இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு வல்லமை மிக்க கட்சியாக பாஜக தொடரும் என தெரிவித்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…