மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலர் டிஸ்மிஸ் !
ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலரை ராஜஸ்தான் அரசு டிஸ்மிஸ் செய்தது.
முன்னாள் கமிஷனர் யக்யா மித்ரா சிங் தியோவை தாக்கியதாக வழக்கில் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயரான பாஜக கவுன்சிலர் சோமியா குர்ஜரை ராஜஸ்தான் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.
மேலும் குர்ஜார் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துணை மேயர் புனித் கர்னாவத், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு,இது “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று கூறினார்.