மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். பின்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இதனிடையே காங்கிரசின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ராஜினாமா கடிதத்தை தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் மேற்கொண்டார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…