இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். நாகர்கோவிலில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராகுல் காந்தி தமிழக வருகையையொட்டி சமூக வலைதளமான ட்விட்டரில் #GoBackRahul என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் #GoBackPappu என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.மேலும் ராகுலுக்கு ஆதரவாக #VanakkamRahulGandhi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
அதேபோல் #GoBackRahul என்ற ஹேஷ் டாக் உலக அளவில் 2-ஆம் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகையையொட்டி #GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் முதலிடத்தில் நான்கு முறைக்கு மேல் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் இன்று ராகுல் வருகையையொட்டி #GoBackRahul என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான போட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…