நாகலாந்தில் பா.ஜ.க.?மேகாலயாவில் காங்கிரஸ்?ஆட்சியமைக்க உரிமை……

Default Image

மேகாலயாவில் காங்கிரசும் நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியும்,  ஆட்சியமைக்க உரிமை கோரி அந்தந்த மாநிலங்களின் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளன.

நாகலாந்தில் பா.ஜ.க.வும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் இணைந்து 29 இடங்களைக் கைப்பற்றின. ஆளும் கட்சியாக திகழ்ந்த நாகா மக்கள் முன்னணியும் 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு இரு கட்சிகளுக்கும் இரண்டு இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த ஜனதா தளம் உறுப்பினரும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளனர். இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்ற பா.ஜ.க. கூட்டணி, அங்கு ஆட்சியை பிடிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ((Neiphiu Rio)) நைபியூ ரியோ, பா.ஜ.க. மூத்த தலைவர் ராம் மாதவ் மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் இருவர் கோஹிமாவில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ((PB Acharya ))பிபி ஆச்சார்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தனர்.

 

இதேபோல் மேகலாயாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களை கைப்பற்றியது. அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத்தும், அகமது பட்டேலும் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நள்ளிரவில் சென்றனர். அங்கு ஆளுநர் கங்கா பிரசாத்தை ((Ganga Prasad)) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான கடிதத்தை வழங்கினர். பெரும்பான்மை இல்லாத போதும் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்கிற அடிப்படையில் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே மேகலாயாவில் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு சுயேட்சை உறுப்பினரான சாமுவேல் சங்மா ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜகவின் சட்டப் பேரவை கட்சி தலைவராக ஏ.எல். ஹெக் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்