இன்று இந்தியா முழுக்க இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை தான் தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள் , பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அதில் இந்தியா வெற்றி பெரும் , உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என பதிவிட்டுள்ளனர். அதற்கு பதில் தரும் விதமாக காங்கிரஸ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், உண்மை தான். இந்தியா வெல்லும் என பதிவிட்டுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என பெயரிட்டுள்ளனர். அதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் பதிவிட்டது அரசியல் பதிவாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து இருந்தனர். அதனை தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 5.2 ஓவரில் 2 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…