கமாரெட்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்தார்.
கமாரெட்டியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று அதே தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவை விட 6,741 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். கே சந்திரசேகர ராவ் 59911 வாக்குகளும், மற்றும் காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி 54916 வாக்குகளும் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கமாரெட்டி தொகுதி பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டதால் ஆரம்பம் முதலே இந்த தொகுதி மீது அனைவரின் கவனமும் இருந்தது.
இந்த தேர்தலில் சந்திரசேகர ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்தது. ஆனால், பிரசாரத்தின்போது இருவரையும் தோற்கடிப்பேன் என்று வெங்கடரமண ரெட்டி கூறினார். அப்போது அது பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத திருப்பங்களுக்கு இடையே சந்திரசேகர ராவ், ரேவந்த் ரெட்டி இருவரையும் பின்னுக்குத் தள்ளி இறுதியில் வெங்கடரமண ரெட்டி வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகித்தார். 12-வது சுற்று வரை ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இருந்தார். ரேவந்தின் வெற்றி நிச்சயம் என நினைத்தபோது 13-வது சுற்றில் இருந்து வெங்கடரமண ரெட்டி முன்னிலை பெற்றார். பின்னர் கடைசி சுற்றான 20 சுற்று வரை வெங்கடரமண ரெட்டி முன்னிலையில் இருந்து இறுதியில் வெற்றி பெற்றார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…