மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக,பாஜக வேட்பாளர் பிரியங்கா நாளை வேட்புமனுத் தாக்கல்…!
பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் நாளை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பவானிப்பூரில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்,பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் நாளை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா கூறுகையில்:”மேற்கு வங்க மாநில மக்கள் வாழ்வதற்கு உரிமை பெற்றுள்ளார்கள், ஆனால், முதல்வர் மம்தாவும், அவரின் கட்சியும் மக்களின் உரிமைகளைப்பறிக்க முயல்கிறார்கள்.
நான் எனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறேன்.வங்காள மக்களுக்காக போராடுவேன். ஆளும்கட்சி வன்முறையில் நம்பிக்கையுள்ளதால், தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படாது. நான் ஆளும் கட்சிக்காகப் போராட உள்ளேன் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான நியாயத்தையும் வழங்க முடியாது.” எனத் தெரிவித்தார்.
மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற நிலையிலும், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.