BJP Surat candidate Mukesh Dalal [File Image]
Election2024 : குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வாகினார்.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 26இல் இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்து ஜூன் 1ஆம் தேதியன்று 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் மக்களவை தேர்தல் நிறைவடைந்து ஜூன் 4ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
ஜூன் 4 மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே தற்போது ஆளும் பாஜக, 2024 தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற மே மாதம் 7ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்ப தேதி கடந்த ஏப்ரல் 12இல் தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதியன்று முடிவடைந்தது. இன்று (ஏப்ரல் 22) வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிதேதியாகும்.
நேற்று காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். அதில் வேட்பாளரை ஆதரித்து கையெழுத்திட்டவர்களில் 2 பேரின் கையெழுத்து போலி என சம்பந்தப்பட்ட நபர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கூறியதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வேட்புமனு ஏற்றுகொள்ளப்பட்டு இருந்தது. மீதம் உள்ள வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் குஜராத் சூரத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தலின்றி போட்டியின்றி தேர்வானார் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால். இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…