வரிசையில் நின்று வாக்களித்த பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர்,விராட் கோலி
பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தற்போது கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் கம்பீர் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தார்.ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தார்.