காந்திநகரில் பாஜக வேட்பாளர் அமித் ஷா வெற்றி!!
தேர்தல் முடிவுகள் : மக்களவை தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று, முன்னிலை விவரங்கள் தற்போது வெளியாகி கொண்டே வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி 543 மக்களவை தொகுதியில், 294 தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
அதன்படி, குஜராத் மக்களவை தொகுதியான காந்தி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பளரான சோனல் ராமன்பாய் பட்டேலை விட 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் சோனல் ராமன்பாய் பட்டேல் 2,66,256 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். 3-வது இடமாக பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரான முகமதினிஷ் தேசாய் 7394 வாக்குகள் பெற்றுள்ளார்.