நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்-பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர்
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.