எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்!

பாரதிய ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து, எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீடு தாக்குதலுக்கு ஆளானது பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தர்மா ரெட்டி, ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து, எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025