உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகின்றன. அவ்வப்போது தங்களது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.
அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹாடிமா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும். காங்கிரஸ் கட்சிக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்த சமயத்தில், உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் அஜய் ராவத் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…