வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரோ, அல்லது தேர்தல் நெருங்கும் வேளையில் தான் பிரதான கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பார்கள். ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக பாஜக தேர்தல் அறிவிப்பதற்கு 4 மாதங்கள் முன்னரே வேட்பாளர்களை அறிவித்து பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் சதீஷ்கர் மாநிலங்களில் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதே பாஜக தங்கள் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 17) டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு மேற்கண்ட மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் பாஜக அறிவித்துள்ள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 21 தொகுதிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 39 இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொகுதிகளை 4ஆக கட்சி தலைமை பிரித்துள்ளது. அதாவது, வெற்றி வாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ள தொகுதிகளை 4ஆம் கட்டமாகவும், ஒருமுறை ஜெயித்துள்ள ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியை 3ஆம் கட்டமாகவும், வெற்றி விகிதம் சரிபாதி உள்ள இடங்களை 2ஆம் கட்டம் என்றும், வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கும் தொகுதிகளை 1ஆம் கட்டமாகவும் பிரித்துள்ளது,
நேற்று அறிவித்த தொகுதிகள் அனைத்தும் 4ஆம் கட்ட தொகுதிகள் என கூறப்படுகிறது . அங்கு பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிக குறைவு. அந்த தொகுதிகளை தற்போதே தேர்ந்தெடுத்து , அங்கு முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளை முடிக்கி விட பாஜக திட்டமிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தி, பாஜக அறிவித்த 21 தொகுதிகளில் 10 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) , ஒன்று பட்டியல் சாதியினருக்கும் (SC) மீதமுள்ள 10 பொது தொகுதிகளாகவும் உள்ளது. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் இடஒதுக்கீடு தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் மொத்தம் 29 எஸ்டி மற்றும் 10 எஸ்சி இட ஒதுக்கீடு உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அதே போல மத்திய பிரதேசத்தில், பாஜக வேட்பாளர்களை அறிவித்த 39 தொகுதிகளில் 8 இடங்கள் எஸ்சிகளுக்கும், 13 இடங்கள் எஸ்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 47 எஸ்டி இட ஒதுக்கீடு இடங்களிலும், 35 எஸ்சி இட ஒதுக்கீடு இடங்களிலும் பெரும்பான்மையான இடஒதுக்கீடு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. அங்கு பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…